டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் குறித்த மீம்ஸ் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அக்ஷய்குமார் கூறியுள்ளதாவது: நீரஜ் சோப்ரா பார்க்க அழகாக இருக்கிறார். எனது வாழ்க்கை வரலாற்று சினிமாவாக எடுக்கபட்டால் அவர் நடிக்கலாம் என கிண்டாலக் கூறியுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.