கடன் தொகை கடன் ரூ. 6,203 கோடி.. வசூலித்தது ரூ. 14,131 கோடி!! பணத்தை திருப்பி கேட்கும் விஜய் மல்லையா

Siva

வியாழன், 19 டிசம்பர் 2024 (09:26 IST)
தன்னுடைய கடன் தொகை ரூ. 6,203 கோடி தான் என்றும், ஆனால் தன்னிடமிருந்து வசூல் செய்தது ரூ. 14,131 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னுடைய பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் கோடி கணக்கில் பணம் கடன் வாங்கிவிட்டு, அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல், கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற விஜய் மல்லையா பிரிட்டனில் தஞ்சம் அடைந்தார். அவர் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மக்களவையில் அமலாக்கத்துறை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுத்த நடவடிக்கைகளில், விஜய் மல்லையாவின் 14,116 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்பட மொத்தம் 22,280 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜய் மல்லையா தனது எக்ஸ்  பக்கத்தில், தன்னுடைய கிங்பிஷர் உள்பட மொத்த கடன் 1200 கோடி  சேர்த்து மொத்த கடன் 6023 கோடி தான் என்றும், ஆனால், எனது சொத்துக்கள் 14 ஆயிரத்து 130 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனது கடன் தொகையை விட இரு மடங்கு கடன் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து கேட்க எனக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

கடன் தொகையை தாண்டி என்னிடம் 8000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும், என்னை துஷ்பிரயோகம் செய்பவர்கள் உள்பட யாராவது முன்வந்து, எனக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்