ஜூலை 17-ல் திட்டமிட்டபடி நீட் தேர்வு- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (19:17 IST)
2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்த  நிலையில் ஜூலை 17-ல் திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 இந்தியாவில் மருத்துவப் படிப்புகளாக எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் போன்றவற்றில் சேர வரும் ஜூலை மமதம் 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளதால்  நீட் தேர்வை தள்லி வைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

.இதனால் மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்த நிலையில், தேசிய தேர்வு முகமை தேர்வு தேதியை தள்ளி வைக்க மறுத்துவிட்டது.

எனவே திட்டமிட்டபடி வரும் ஜூலை 17 ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி னீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்