எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க நடவடிக்கை! – மீண்டும் தேர்தலா?

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (14:21 IST)
தேசியவாத காங்கிரஸிலிருந்து கட்சி தாவிய எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் கூட்டணி ஆட்சி அமைக்கு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸின் 22 எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையில் கட்சி தாவி பாஜகவுடன் கை கோர்த்தனர். இதனால் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், கட்சி தாவிய அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதனால் கோபமுற்ற சிவசேனா ‘தேசியவாத காங்கிரஸ் எங்களை முதுகில் குத்திவிட்டது’ என தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் ‘அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல. கட்சி தலைவர்களுக்கோ தொண்டர்களுக்கோ பாஜக ஆட்சியமைப்பதில் விருப்பல் இல்லை. அஜித் பவார் செய்தது ஒழுங்கீனமான செயல்.

சிவசேனா மற்றும் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. பாஜகவுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏக்கள் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி பதவி இழக்க நேரிடும்’ என கூறியுள்ளார்.

ஒருவேளை 22 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம். ஆனால் தற்போது பட்னாவிஸ் பதவியேற்றுள்ள நிலையில் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது சிவசேனா கூட்டணி சாத்தியமானதுதானா என்ற கேள்வியும் உள்ளது. இருதரப்பினரிடையே அரசியல் ரீதியாக உருவாகியுள்ள இந்த பிரச்சினைகளால் மகாராஷ்டிர அரசியலில் நிலையற்றத்தன்மை உண்டாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்