மோடி குடுத்த பணம்னு நெனைச்சேன்! – எஸ்.பி.ஐயில் என்னை போல் ஒருவன்!

சனி, 23 நவம்பர் 2019 (13:23 IST)
தனது வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் வந்ததால் திக்குமுக்காடி போயிருக்கிறார் ஒருவர்.

மத்திய பிரதேசத்தின் ஆலம்பூர் நகரத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. இங்கு சமீபத்தில் ஒரே மாதிரியான பெயர்களை கொண்ட இருவர் கணக்கு தொடங்கியுள்ளனர். இருவரது பெயர்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே கணக்கு எண்ணில் இருவருக்கும் கணக்கு தொடங்கி ஏடிஎம் கார்டு முதற்கொண்டு அளித்திருக்கிறார்கள்.

இருவரில் ஒருவர் தனது தொழிலில் கிடைக்கும் லாபங்களை அடிக்கடி வங்கியில் செலுத்தி வந்திருக்கிறார். ஆனால் வங்கி கணக்கை சோதித்தபோது அதிர்ச்சி. அதில் பணம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. இது குறித்து வங்கியில் அவர் புகார் அளித்துள்ளார்.

அப்போதுதான் ஒரே எண்ணில் இருவருக்கும் கணக்கு தொடங்கி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இரண்டாவது நபர்தான் அந்த தொகையை எடுத்து செலவு செய்திருக்க வேண்டும் என கருதிய வங்கி அவரை அழைத்து விசாரித்துள்ளது. அவரும் “ஆமாம் நான்தான் செலவு செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

அது உங்கள் பணமில்லை என தெரிந்தும் ஏன் எங்களிடம் சொல்லவில்லை என வங்கி அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு “நான் மோடி அனுப்பிய பணம் என்று நினைத்தேன். என்னுடைய கணக்கில் என்னை போல் ஒருவர் இருப்பதே நீங்கள் சொல்லிதான் தெரியும்” என கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்