ஆட்சியில் பங்கு கொடுங்க!? சிவசேனா பந்தை திருப்பி போட்ட தே.காங்கிரஸ்!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (11:17 IST)
மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க பேசி வருகிறது.

மகாராஷ்டிராவில் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிரிவினையை தொடர்ந்து ஆட்சியமைக்க யாரும் வராததால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியை முறித்த சிவசேனா தேசியவாத காங்கிரஸிடம் பேசி வருகிறது.

சிவசேனாவை விட தேசியவாத காங்கிரஸ் இரண்டு தொகுதிகள் மட்டுமே குறைவாக வென்றுள்ளது. எனவே கூட்டணி அமைத்தால் பாஜகவிடம் பேசிய டீலிங் போலவே ஆட்சியல் இரண்டரை ஆண்டுகள் தர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாம். அந்த இரண்டரை ஆண்டு ஆட்சி பிரச்சினையில்தான் பாஜகவுடன் கூட்டணியை முறித்தது சிவசேனா.

இப்போது சிவசேனாவின் பிளானை அவர்களிடமே செயல்படுத்தி பார்க்கிறது தேசியவாத காங்கிரஸ். இதனால் தேசியவாத காங்கிரஸ் டீலிங்கிற்கு ஒகே சொல்லலாமா அல்லது பழையபடி பாஜகவுடன் சேர்ந்து கொள்ளலாமா என யோசித்து வருகிறதாம் சிவசேனா. பாஜகவும் மறுபடி சிவசேனாவோடு கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்