மகாராஷ்டிரத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தியுள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சிவசேனா யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததாலும், கூட்டணிகளில் இழுபறி நீடித்து வந்ததாலும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு கால அவகாசம் தரவேண்டும் என கோரி சிவசேனா தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் முதல்வர் பதவியில் பங்கு கொடுத்தால் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர சிவசேனா பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவசேனாவுக்கு தேவை ஆட்சியில் சமபங்கு. ஒருவேளை அதை தேசியவாத காங்கிரஸ் தருவதாக ஒப்புக்கொண்டால் கூட சிவசேனா அவர்களோடு கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.