காஷ்மீர் சட்டசபையில் தள்ளுமுள்ளு

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (15:07 IST)
காஷ்மீர் சட்டசபை கூட்டம் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர், இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது.


 
 
காஷ்மீர் சட்டசபைக்குள் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் இணைந்து விலைவாசி உயர்வு, ரேஷன் பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
 
சட்டசபையில் போராட்டம் நடத்தியவர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்