3-வது முறையும் மோடிதான் பிரதமர்: அடித்து சொன்ன அமித் ஷா

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (17:57 IST)
மூன்றாவது முறையும் நரேந்திர மோடி தான் பிரதமர் என அசாம் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 
 
அமைச்சர் அமித்ஷா அசாம் மாநிலத்திற்கு சென்ற நிலையில் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அசாமில் உள்ள 14 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 
 
மேலும் நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் அவர் கூறினார் 
 
 கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் காங்கிரஸ் கூட்டணி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்