கோடிக்கணக்கான பணத்துடன் மாட்டிய பாஜக கூட்டணி கட்சி தலைவரின் மருமகன்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (18:19 IST)
பாஜக கூட்டணி கட்சி தலைவரின் மருமகன் 3.5 கோடி பணத்துடன் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

நாகலாந்து மாநிலத்தின் நாசா மக்கள் முன்னணி கட்சி தலைவர் கெகிகோ ஜிமோமியின் மகன் அனடோ. இவர் நாகலாந்து முன்னாள் முதல்வரும், தற்போதைய பாஜக கூட்டணி எம்.பி.யுமான நெபியோ ரியோவின் மருமகன் ஆவார்.

அனடோ ரூ.3.5 கோடி பணத்துடன் திமாபூர் விமான நிலையம் சென்றார். அவை அனைத்தும் ரூ.500, ரூ-1000 நோட்டுகள் ஆகும். விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய போது ரூ.3.5 கோடி பணம் சிக்கியது.

அப்போது அந்த பணம் திடீர் என்று மாயமாகி விட்டது. இது பற்றி விசாரணை நடந்து கொண்டிருந்த போது அனாடோ அங்கிருந்து தனியார் விமானம் மூலம் அரியானா மாநிலம் ஹிசார் சென்றார். அங்கு விமான நிலையத்தில் சோதனையிட்ட போது ரூ.3.5 கோடி பணம் சிக்கியது.

அது சட்டப்படியான பணம் என்றும் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் என்றும் தெரிவித்தார். மேலும் இதற்கு வருமான வரித்துறையின் சான்றிதழ் இருப்பதாகவும் கூறி அதை காண்பித்தார்.

திமாபூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை, அனாடோ தனது நண்பர்கள் மூலம் கடத்தி, தான் பயணம் செய்ய இருக்கும் மற்றொரு விமானத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அனாடோ பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அடுத்த கட்டுரையில்