இந்தியாவுக்கான சீனத் தூதர் தனது சமூக வலைதளத்தில், "மற்ற நாடுகளை அடக்குவதற்கு வர்த்தக வரியை ஒரு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுகிறது. இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி விரைவில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இரு நாட்டு தலைவர்களும் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவை கண்டித்து சீனா வெளியிட்டிருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.