இந்நிலையில் இந்த காய்ச்சலால் கடந்த ஒரு வாரத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபிரோசாபாத் பகுதியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.