இந்த பக்கம் ராமர் கோவில்.. அந்த பக்கம் மசூதி! – பிரம்மாண்ட மசூதிக்கான வரைப்படம் வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (10:21 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

பல ஆண்டுகளாக பிரச்சினைக்கு உட்பட்டு வந்த ராமஜென்மபூமி விவகாரத்தில் கடந்த நவம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ராமஜென்மபூமி நிலம் ராமர் கோவிலுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதில் சன்னி வக்பு வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 26ம் தேதி நடத்தப்பட உள்ளது. புதிதாக கட்டப்பட உள்ள மசூதியின் கிராபிக் மாடலை இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்