குடிபோதையில் 12வது மாடியிலிருந்து குதித்த இசைக்கலைஞர்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (15:14 IST)
பெங்களூரைச் சேர்ந்த இசைக்கலைஞர் குடிபோதையில் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.


 

 
பெங்களூரைச் சேர்ந்த கரண் ஜோசப்(29) என்ற இசைக்கலைஞர் மும்பையில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். இன்று காலை தனது நண்பர்களுடன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த கரண் திடீரென ஜன்னல் மீது ஏறி கீழே குதித்து விட்டார். 
 
அதிர்ச்சி அடைந்த நண்பரகள்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வீட்டில் இருந்து குதித்தபோது குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்