மும்பையில் புறநகர் ரயில்சேவை திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவதி.. என்ன காரணம்?

Mahendran
திங்கள், 8 ஜூலை 2024 (10:52 IST)
தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாந்த்ரா, குர்லா, தாதர், சியோன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பையின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக சிஎஸ்எம்டி ரயில் நிலையம் முதல் தானே வரையிலான புறநகர் ரயில்சேவை இன்று தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளன
 
மேலும் மும்பை சுனாபட்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மும்பை துறைமுகம் வரையிலான புறநகர் ரயில்சேவையும் தற்காலிகமாக நிறுத்தம் என  மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
இன்று வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை என்பதால் புறநகர் ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் கடும் அவஸ்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
புறநகர் ரயில் நிறுத்தப்பட்டதால் பேருந்துகளில் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக கட்டணங்கள் கேட்கப்படுவதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்றும் இதனால் மும்பையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்