முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த டீலிங்கால் முகேஷ் அம்பானிக்கு அதிக லாபம் இருப்பதாக தெரிகிறது.
இந்த அறிவிப்புகள் நேற்றைய ஹாட் டாப்பிக்காக இருந்த நிலையில் இன்று, முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய பங்குசந்தை கடுமையாக சரிந்ததால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இவர் தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஃபேஸ்புக் முதலீட்டால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அமெரிக்க சந்தையிலும் உயர்ந்தது. எனவே, ஒரே நாளில் அம்பானியின் சொத்து மதிப்பு 4.7 பில்லியன் டாலர் உயர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.