கைவிட்டு போகும் சொத்துக்கள்... கலக்கத்தில் அம்பானி பிரதர்ஸ்!!

புதன், 12 பிப்ரவரி 2020 (16:02 IST)
அனில் அம்பானி வாங்கிய பணத்தை திரும்பி செலுத்தாவிட்டால் அவரது சொத்துக்கள் ஏலத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
2012 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமம், அனில் அம்பானி அளித்த உத்தரவாதத்தின் பேரில் சீனாவின் 3 வங்கிகளின் மும்பை கிளைகளில் இருந்து 4,836 கோடி ரூபாய் கடன் பெற்றது. ஆனால், தொடர் நஷ்டத்தால் பணத்தை திருப்பி செலுத்த இயலாது என அனில் அம்பானி தெரிவித்தார்.  
 
ஆனால், மும்பையில் ஆடம்பர கார்கள், பங்களா என்று சொகுசாக அனில் அம்பானி வாழ்வதாக வங்கிகள் தரப்பு கூறியதால் நீதிமன்றம், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உறவினர்களின் உதவியோடு கடனை திருப்பிச் செலுத்துமாறு அனில் அம்பானிக்கு கெடு விதித்துள்ளது. 
 
அதாவது, ரூ.711 கோடியை முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்குள் செலுத்துமாறு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இந்நிலையில், 3 சீன வங்கிகளிடம் இருந்து அனில் அம்பானி வாங்கிய பணத்தை திரும்பி செலுத்தாவிட்டால் அவரது உடைமைகளும், சொத்துக்களும் ஏலத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அனில் அம்பானி மட்டுமின்றி வைர வியாபாரி நீரவ் மோடி, தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோரின் மதிப்பு மிகுந்த உடைமைகளை ஏலத்தில் விற்கும் நடவடிக்கைகள் துவங்க உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்