முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் புது மருமகள் வந்த நேரத்தில் 25000 கோடி ரூபாய் முகேஷ் அம்பானிக்கு லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் நடந்த தினத்தில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஒரு சதவீதம் ஏற்றத்தை சந்தித்ததாகவும் கடந்த ஒரே மாதத்தில் இந்த பங்குகள் 6.50% உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.
ஜூலை 12ஆம் தேதி அன்று ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ஜென்ட் திருமணம் நடந்த தினத்தில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகமாக உயர்ந்ததால் 25000 கோடி லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருமணம் உலகே விலைக்கும் வகையில் நடந்ததை அடுத்து இந்த நிறுவனங்களின் பங்குகளை பலர் வாங்க தொடங்கியதாகவும் அதனால்தான் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 25 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 5ஆம் தேதி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் என்று இருந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதி அவரது சொத்து மதிப்பு 121 பில்லியன் டாலர் என ஏற்றம் கண்டுள்ளது. மேலும் உலக பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது பதினாறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.