பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொன்ற கொடூர தாய்!

ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (13:02 IST)
கேரளாவில்  பிறந்து 8 நாட்களே குழந்தை, தனது சாயலில் இல்லாததால் தாயே குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கட்டப்பனாவில், பின்னு மற்றும் அவரது மனைவி சந்தியா வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 9 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. சந்தியாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று சந்தியா தனது கணவரிடம் குழந்தை அசைவுற்று இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும் குழந்தையின் கழுத்தில் கீரல்கள் இருப்பதாகவும் கூறினர். பிறகு மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சந்தியாவிடம் விசாரித்தனர். விசாரணையில் குழந்தை தனது நிறத்தில் இல்லை என்பதாலும், தனது சாயலில் இல்லாததாலும் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறினார். இதனையடுத்து போலிஸார் அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்