ஆந்திராவில் மருமகனோடு தகாத உறவில் ஈடுபட்ட மாமியார், சொந்த மகளையே கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் கேவிபி புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் 15 வயது சிறுமிக்கும் காதல் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். அவர்களோடு சிறுமியின் 40 வயதான தாயாரும் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தாயாருக்கும், அந்த இளைஞருக்கும் இடையே கள்ளக்காதல் உருவான நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த மருமகன் - மாமியார் கள்ளக்காதல் சிறுமிக்கு தெரிய வர அவர் அவர்களை கண்டித்துள்ளார்.
ஆனால் சிறுமியின் தாயாரோ தனது மருமகனை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக வீட்டில் வைத்து இளைஞர் தனது மாமியாருக்கே தாலிக் கட்டியதாகவும், அதை சிறுமி தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய் தனது மகளையே கொல்ல முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து வந்தவர்கள் சிறுமியை மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K