வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது, அந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று, இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.