இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

Siva

ஞாயிறு, 26 மே 2024 (13:49 IST)
கோப்பு புகைப்படம்

வெளிநாடுகளில் தாய்பாலை பதப்படுத்தி விற்பனை செய்து வரும் நிலையில் இந்தியாவில் தாய்ப்பாலை விற்க அனுமதி இல்லை என்றும் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் மத்திய உச்ச உணவு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை வணிகமயமாக்குவது குறித்த அனுமதி படிவங்கள் அரசுக்கு வந்துள்ளன. ஆனால் தாய் பாலை எந்த ஒரு வணிக நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது.
 
குழந்தைகளுக்கு மட்டுமே இது கொடுக்கப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பெண்களிடம் இருந்து தாய்ப்பாலை விற்பனை நோக்கங்களுக்காக பவுடர் வடிவில் சில நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
 
தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளையும்  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தாய்ப்பாலை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவது இந்தியாவை பொறுத்தவரை சட்ட ரோதம், விதிகளை மீறி தாய்ப்பாலை வணிக நோக்கத்திற்காக விற்பனை நிறுவனங்கள் உடனடியாக நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்