வாழவே ஆபத்தான நாடுகள் பட்டியல்: இந்தியா எந்த இடத்தில்?

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (19:11 IST)
பல்வேறு அரசியல் சூழல் குறித்து உலகளாவிய பட்டியலை வெளியிட்டு வரும் தனியார் செய்தி நிறுவனம் உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2019ம் ஆண்டில் நடைபெற்ற உலகளாவிய சம்பவங்களை கணக்கிட்டுள்ள ஸ்பெக்டாடர் எக்ஸ் என்னும் செய்தி நிறுவனம் உலகில் வாழவே ஆபத்தான நாடுகள் – 2019 என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிர்ச்சிகரமாக இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. பிரேசில் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் தெற்கு ஆப்பிரிக்காவும், தொடர்ந்து நைஜீரியா, அர்ஜெண்டினா, பெரு உள்ளிட்ட நாடுகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

வாழவே ஆபத்தானது என்பது அரசியல் அடிப்படையிலானதா அல்லது சுற்றுசூழல் அடிப்படியிலானதா என அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இரண்டு சார்பிலுமே இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு பிறகு இடம்பெற்றுள்ள பெரூ, கென்யா போன்ற நாடுகள் சுற்றுசூழல், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் இந்தியாவை விட மிகவும் பின் தங்கியே உள்ள நிலையில் இது சரியான அளவீடாக இருக்க வாய்ப்பில்லை என சிலர் கருத்து கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்