ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் 70% பேர் படிப்பறிவுடன் இருந்தனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (18:59 IST)
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் எழுபது சதவீதம் பேர் இந்தியாவில் படிப்பறிவுடன் இருந்ததாகவும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது தான் படிப்பறிவு குறைந்துவிட்டது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று பேசிய போது ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் இந்தியாவில் 70% பேர் படிப்பறிவு மிக்கவர்களாக இருந்தனர். அப்போது இங்கு வேலை வாய்ப்பின்மை என்பதே இல்லை.
 
ஆனால் ஆங்கிலேயர்களை கல்வி முறையை நம் நாட்டிலும் நம் நாட்டின் கல்வி முறையை அவர்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்த தொடங்கினார்கள். அதனால்தான் படிப்பறிவு நம் நாட்டில் 17 சதவீதமாகவும் அவர்கள் நாட்டில் 70% ஆகவும் மாறியது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்