மலையாளத்தில் ரீமேக் ஆகும் 8 தோட்டாக்கள்… இயக்குனர் ஸ்ரீகணேஷ் பெருமிதம்!

திங்கள், 6 மார்ச் 2023 (14:43 IST)
2017 ஆம் ஆண்டு வெற்றி, அபர்ணா பாலமுரளி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 8 தோட்டக்கள். இந்த படத்தினை மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக, இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திரம் அமெரிக்காவில் வெளியாகி பேய் ஹிட் அடித்த பிரேக்கிங் பேட் என்ற சீரியலின் கதாநாயகனை அடியொற்றி உருவாக்கப்பட்டது. ஸ்ரீகணேஷின் திறமையான இயக்கம் மற்றும் பாஸ்கரின் நடிப்பால் அந்த கதாபாத்திரம் பாராட்டப்பட்டது. இதையடுத்து இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

அதையடுத்து இப்போது மலையாளத்தில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷன் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ள இயக்குனர் ஸ்ரீகணேஷ் “இயக்குனர் பிரியதர்ஷன் படத்தில் ரைட்டர் என்று என்னுடைய பெயர் வருவது பெருமையான தருணம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்