தமிழ்நாடு போலீஸார் 12 பேரை சிறைபிடித்த ராஜஸ்தான் போலீஸ்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (18:02 IST)
குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசார் 12 பேரை ராஜஸ்தான் போலீசார் சிறை பிடித்து வைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக தமிழ்நாடு போலீசார் 12 பேர் ராஜஸ்தான் சென்றனர். இந்த நிலையில்  குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க தமிழ்நாடு போலீசார் லஞ்சம் கேட்டதாகவும், இதனையடுத்து ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் 12 தமிழக போலீசாரை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து திருச்சி தனிப்படை போலீசாரிடம் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக தமிழக போலீஸ் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்