காஷ்மீரில் விரைவில் தேர்தல்: மோடி அறிவிப்பு!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:03 IST)
காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 
 
அதில், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும், நாட்டின் எந்த ஒரு பகுதியும் பின்தங்கிவிடக்கூடாது, தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் விரைவில் தொடங்கப்படும், விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை என பேசிய அவர் காஷ்மீர் தேர்தல் குறித்தும் பேசினார். 
 
ஆம், காத்மீரில் தொகுதி மறுவரை பணிகள் முடிந்தவுடன் விரைவில் தெர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனையடுத்து ஜம்மு, லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்