பிரதமர் மோடி மற்றும் டெல்லி முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவருமே இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமின்றி தலித்துக்கள் சிறுபான்மையினருக்கும் எதிரானவர்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்காக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது நானும் எனது கட்சியும் பிரதமர் மோடிக்கு பயப்பட மாட்டோம் என்றும் பிரதமர் தான் காங்கிரஸ் கட்சியை பார்த்து பயப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும் முந்தைய தேர்தலில் யமுனை நதியை தூய்மைப்படுத்தி அதில் மூழ்கி நீராடுவேன் என்று கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவருமே இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் என்றும் தலித்துகள் சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பை மீறுவேன் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி கொடுக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும் என்றும் இட ஒதுக்கீடு மீதான 50% உச்சவரம்பை உடைப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்