சைட் டிஷ் வாங்கிவர மறுத்த சிறுவனைக் கொலை செய்த கும்பல்!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (11:22 IST)
டெல்லியில் மதுபோதையில் இருந்த கும்பல் மது வாங்கி வர மறுத்த சிறுவனைக் கொலை செய்துள்ளது.

டெல்லி மதன்பூர் கதார் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அல்காஸ் தனது நண்பன் வீட்டுக்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையில் குடித்துக் கொண்டு இருந்துள்ளனர் ஷதாப் என்கிற பல்சர் மற்றும் அவரது நண்பர்கள்.

அப்போது சிறுவனை அழைத்த அவர்கள் சைட் டிஷ் வாங்கிவர சொல்லி மிரட்டியுள்ளனர். அதற்கு சிறுவன் மறுக்கவே அவனிடம் தகராறு செய்துள்ளனர். ஆனால் அப்போதும் சிறுவன் வாங்கிவர மறுக்கவே அவனைப் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியாகி விட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஷதாப்பை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்