தேர்தல் வியூகம் மன்னன் பிரசாந்த் கிஷோர் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார் என்பதும் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமான கூட்டணி ஒன்றை அமைக்க திட்டமிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே அவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணிக்கு ஏற்பாடு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை பிரதமர் வேட்பாளரை அறிவித்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்
இதனை அடுத்து ராகுல் காந்தி அல்லது முக ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாகவும் இதனை மற்ற கட்சித் தலைவர்களிடம் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது
வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் முக ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்