ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
வெள்ளி, 16 ஜூலை 2021 (07:19 IST)
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனை அடுத்து ஊரடங்கு நீடிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை செய்யும் முதல்வர் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசனை செய்வார் என்றும் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்த முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது
குறிப்பாக பார்கள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
தமிழகத்தில் ஜூலை 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூடுதல் சலுகைகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக கோவை சேலம் ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு மற்ற மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் போல் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது