தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகப் தகவல் வெளியாகும் நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளாக சேலம், சங்ககிரி, நாமக்ககல், திருச்செங்கோடு, பொள்ளாசி, ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி ஆ.பாஸ்கர்குமார் உத்தரப்படி, போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், பாஸ்க்ரன் மேற்பார்வையில் மேற்கூறிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட குழுக்களாகப் பிரிந்து கலப்பட டீசல் உள்ளதாக என வாகன் சோதனை செய்து வருகின்றதாகக் கூறப்பட்டுள்ளது.