முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு எச்சரிக்கை
செவ்வாய், 16 மார்ச் 2021 (15:43 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவிய நிலையில், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், முதல் கட்ட கொரோனா பரவல் முடிந்து தற்போது இரண்டாம்கட்ட கொரோனா அலைபரவத்தொடங்கியுள்ளது.
சமீபத்தில் கொரோனா தொற்றுக் குறைந்துவந்து கொண்டிருந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனால் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளது.