15 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற மூன்று வாலிபர்கள்...

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (13:43 IST)
மஹாராஷ்டிராவை சேர்ந்த சிறுமியை மூன்று வாலிபர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அப்பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோபர்டி எனும் கிராமத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி மூன்று வாலிபர்கள் ஒன்றாக பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அப்பெண்ணின் கை, கால்களை முறித்து அடித்து காயப்படுத்தினர். இறுதியில் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.  
 
இந்நிலையில், அந்த குற்றத்தில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்