சிறுமியை கர்ப்பமாக்கிய கிராம தலைவருக்கு 31 வருட சிறைத் தண்டனை...

செவ்வாய், 28 நவம்பர் 2017 (10:49 IST)
திருச்சி அருகே 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய கிராம தலைவருக்கு 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
திருச்சி அருகேயுள்ள துருவெறும்பூர் ஆலத்தூரை சேர்ந்தவர் கீதா. கணவரை இழந்த இவருக்கு இரு பெண் குழந்தைகள். இதில், மூத்த மகள் திருமணமாகி சென்றுவிட்டார். இளைய மகளோடு கீதா வாழ்ந்து வந்தார்.
 
அந்நிலையில், கிராமத் தலைவராஜன் வைரம்(48), கீதாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று பண உதவி செய்துள்ளார். அதனால், கீதாவுக்கும் அவருக்குமிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் கீதாவின் 17 வயது மகள் மீது சபலப்பட்ட வைரம், மயக்க மருந்து கொடுத்து அடிக்கடி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.  இதில், அந்த சிறுமி கர்ப்பமைடந்தார். இந்த விவகாரம் கீதாவிற்கு தெரியவர, இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். 
 
இதையடுத்து, வைரத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, மூன்று பிரிவுகள் மொத்தம் 30 ஆண்டு சிறைத்தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒரு ஆண்டும் என மொத்தம் 31 ஆண்டு தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன் பின் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்