ஆந்திராவில் புதிய எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தகவல்

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:58 IST)
ஆந்திராவின் காக்கிநாடா கடற்பகுதியில் புதிய எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள காக்கிநாடா கடற்கரை பகுதியில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 45,000 பேரல்கள் வரை இங்கு பெட்ரோல் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு இதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்ட நிலையில், நாட்டின்  ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில், இங்கிருந்து 7 சதவீதம் எண்ணெய் மற்றும் 7 சதவீதம் எரிவாயு எடுக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்