புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை யார் ஏற்பது?

வியாழன், 28 மே 2020 (15:34 IST)
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. 
 
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு தேவை? என கேள்வி எழுப்பியது. 
 
அதற்கு மத்திய அரசு, புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்கின்றன. உணவு மற்றும் குடிநீரும் ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது.
 
மத்திய அரசும், மாநில அரசுகளும் புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் முழு வீச்சில் செயல்படுகின்றன. 187 ரயில்கள் மூலம் ஒரு நாளுக்கு மொத்தம் 1.85 லட்சம் புலம்பேயர் தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுகின்றனர். 
 
இதேபோல அருகில் உள்ள மாநிலங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு சுமார் 3.36 லட்சம் பேர் என மொத்தம் 47 பேர் சாலை போக்குவரத்து மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்