உணவுப் பொட்டலத்திற்காக அடித்துக் கொள்ளும் தொழிலாளர்கள் ! வைரலாகும் வீடியோ

செவ்வாய், 26 மே 2020 (17:26 IST)
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளன்ர். அரசு  சில தொழில்துறையினருக்கு தளர்வு அளித்துள்ளது.  இருப்பினும் பெரும் பெரும்பாலான மக்கள் பசி பட்டிணியில் வாழ்ந்து வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலத்திற்குச் செல்லு மக்களுக்கு உணவு ,குடிநீர் வழங்கவில்லை என புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சிறப்பு ரயிலில் புலம்பெயர் மக்கள் செல்லும்போது,  ஒரு ரயில்வே ஊழியர் உணவுப்பொட்டலங்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது நடைமேடையில் தள்ளிவிட்டு அவரிம் இருந்த உணவுகளை எடுக்க மக்கள் போட்டி போட்டு தூக்கிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் சாண்டா ரயில் நிலையத்திலும், பீகாரில் கடிஹர் ரயில் நிலையத்தில் மக்கள் உணவுக்காக மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு உணவு கொடுத்து உதவ வேண்டும் என அனைவரும் கேட்டுக் கொள்கின்றனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்