மேற்கு வங்க மாநிலம், துர்காப்பூரில் தனியார் மருத்துவமனை அருகே, ஒடிசாவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில், நண்பருடன் வெளியே சென்ற மாணவி, மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவி தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இந்த கொடூர சம்பவத்திற்கு மேற்கு வங்க மருத்துவர்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கவலை தெரிவித்த நிலையில், இந்திய தலைமை நீதிபதி தாமாக முன்வந்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது.