இரவு நேரத்தில் மாணவிகள் வெளியே செல்லாதீர்கள்.. மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து மம்தா பானர்ஜி..!

Siva

திங்கள், 13 அக்டோபர் 2025 (16:56 IST)
மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்ல மாணவிகள் அனுமதிக்கப்படக் கூடாது. அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார். 
 
குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும், ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், இச்சம்பவத்தை உ.பி., மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களுடன் அவர் ஒப்பிட்டு பேசினார்.
 
வெள்ளிக்கிழமை இரவு உணவுக்காக சக மாணவர் ஒருவருடன் வெளியே சென்றபோது, மேலும் இருவர் வந்ததால், அந்த சக மாணவர் தப்பி ஓடியதாகவும், அப்போது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள ஒடிசா முதல்வர் மோகன் சரண் மான்ஜி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்தாவை வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.க.வினர் சட்டம் ஒழுங்கின் தோல்வி என கூறி திரிணாமுல் காங்கிரஸை விமர்சித்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்