நாளை சென்னை வருகிறார் மாயாவதி..! தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுகோள்..!!

Senthil Velan
சனி, 6 ஜூலை 2024 (10:53 IST)
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நாளை சென்னை வருகிறார்.
 
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக  8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரும், மாநில கட்சித் தலைவருமான  ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் சோகத்தையும், சீற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க அரசு உடனடியாக கடுமையான, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.  

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!
 
மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு,  ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை காலை சென்னைக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன் என்றும் அனைவரும் அமைதி காக்க வேண்டும், இதுவே வேண்டுகோள் என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்