பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 17ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக தரப்பில் ஒரு வேட்பாளரும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் நேருக்கு நேர் மோதல் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர் கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு பெண் அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என மாயாவதி தெரிவித்துள்ளார்.