“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

Mahendran

புதன், 7 மே 2025 (16:09 IST)
“ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலில் இந்திய நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும்  தாக்குதலை நடத்தியது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இடம், பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் அழிக்கப்பட்டன. குறிப்பாக, ஜம்முவில் போலீசாரை கொன்ற பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற சியால்கோட்டின் சர்ஜல் முகாமும் முழுமையாக நாசமடைந்தது.
 
இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரும் பலியாகினர். அவரது சகோதரி, சகோதரியின் கணவர், மருமகன், அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பின் 4 முக்கிய உறுப்பினர்களும் உயிரிழந்தனர். ஆனால் மசூத் அசார் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
 
2001 நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 2008 மும்பை தாக்குதல் போன்ற முக்கிய பயங்கரவாத செயல்களில் மசூத் அசார் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்