3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (18:27 IST)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு, மூன்றாவது குழந்தை பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளது.
 
பணிக்குச் சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற ஒரு பெண், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்தபோது அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த அமர்வு சுட்டிக்காட்டியது.
 
இந்த அடிப்படையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
 
மேலும், குழந்தை பிறப்புக்கு முன்பும் பின்பும் ஒரு தாய் அனுபவிக்கும் வலிகளை கருத்தில் கொண்டே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே, மூன்றாவது பிரசவத்திற்காக மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நீதியின் முன் நிற்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்