ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷூபம் திவேதியின் மனைவி ஐஷன்யா திவேதி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, இந்த தாக்குதலை நடத்திய முப்படைகளுக்கு நன்றி. சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதல் தனிப்பட்ட முறையில் எனக்கு தொடர்புடையதாக கருதுகிறேன். இந்த தாக்குதல் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தவுடன் நான் கதறி அழுதேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், இந்த தாக்குதலை நடத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். நாடே உங்களுக்குத் துணையாக இருக்கும் என்றும், பஹல்காம் தாக்குதல் போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.