இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

Siva

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (18:55 IST)
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் ஒய் காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவர் பெற்றுள்ளார். அவர் தனது பேரனுக்கு இந்த காரை பரிசாக அளிப்பதாக கூறியுள்ளார்.
 
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை கடந்த ஜூலை மாதம் மும்பையில் திறந்தது. இந்த ஷோரூம் திறக்கப்பட்ட அடுத்த நாளே, அமைச்சர் பிரதாப் சர்நாயக் மாடல் ஒய் காரை முன்பதிவு செய்திருந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்த காரின் டெலிவரியை அவர் பெற்றுக்கொண்டார்.
 
இந்தியாவின் முதல் டெஸ்லா காரை வாங்கிய பெருமையை தான் பெறுவதாக பிரதாப் சர்நாயக் தெரிவித்தார். மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே, குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தவே இந்த காரை வாங்கியுள்ளேன்" என்று அவர் கூறினார்.
 
மேலும், இந்தக் காரை தனது பேரனுக்கு பரிசாக அளிக்க போவதாகவும், இதன் மூலம் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்