எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்லும்: மார்கண்டேய கட்ஜூ

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (11:48 IST)
தமிழக முதலமைச்சராக சசிகலாவும், ஒ.பன்னீர்செல்வமும் மோதிக்கொண்டிருந்த வேளையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்தது.


 

இதனையடுத்து கூவத்தூரில் சசிகலா தலைமையில்  நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தால் அதிமுக அழிவுப் பாதையில் செல்லும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழர்கள் முட்டாள்கள் இல்லை. அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்லும். தற்போது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் திமுக பெரும்பான்மையான வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்