ராஜீவ் காந்தி போல் மோடியை கொல்ல சதியா? திடுக்கிடும் தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (13:34 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கடந்த 1991ஆம் ஆண்டு தீவிரவாதிகள் சதி செய்து கொலை செய்தது போல் பிரதமர் மோடியை கொலை செய்ய நக்சலைட்டுகள் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் போலீசர் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பாரத பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் இருந்ததாகவும், எனவே மாவோயிஸ்ட்கள் பிரதமரை கொல்ல சதி செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் மத்திய உளவுத்துறைக்கு,மகாராஷ்டிர போலீஸ் தகவல் அளித்துள்ளது.
 
ராஜீவ் காந்தி படுகொலை போன்ற நிகழ்வை நடத்த திட்ட்மிட்டு இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்