குழந்தை பெறுவதற்கு தனது விந்தினை சேமிக்கும் திருநங்கை

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (14:44 IST)
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் முழுமையாக பெண்ணாக மாற்றம் அடைவதற்கு முன்னர் எதிர்காலத்தில் குழந்தை பெற்று கொள்வதற்காக தனது விந்துணுக்களை சேகரித்து வருகிறார்.


 

 
 
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் வசிக்கும் 39 வயதுடைய இந்நபர் பார்வைக்கு ஆணாக இருந்தாலும், மனதளவில் மற்றும் செயல்பாட்டில் பெண்மையை கொண்டுள்ளார். முழுவதும் பெண்ணாக மாறுவதற்கு தற்போது இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவர் கடந்த இரு மாதங்களாக பெண்ணிற்கான ஹார்மோன்களை பெறுவதற்காக மருத்துவ சிகிச்சை ஒருபுறம் பெற்றுவருகிறார். மற்றொரு புறம் தனது விந்துணுக்களையும் சேகரித்து வருகின்றார். பெண்ணாக மாற்றம் அடைந்ததற்கு பின் தன்னுள் விந்தணுக்கள் உருவாகாது என்பதற்காக சிகிச்சைக்கு முன்னரே விந்துணுக்களை சேமித்து வைப்பதை தொடங்கிவிட்டார்.
 
அவர் சேமித்து வைத்துள்ள விந்துணுக்களால் வாடகைத்தாய் மூலம் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அந்த விந்துக்கள் மூலம் அவரால் கருத்தரிக்க முடியாது. ஹார்மோன் மாற்று சிகிச்சையின் மூலம், அவருடைய வெளிப்புற பகுதிகளை மட்டுமே பெண்ணிற்கான உறுப்புகளாக மாற்ற முடியும். அவரால் ஒருபோதும் தாய்மை அடைய முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்