போதையில் 90வயது மாமியாரை கற்பழித்த மருமகன் கைது...

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (16:54 IST)
மதுபோதையில் ஒருவர் தனது மாமியாரையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மெப்பயூர் எனும் பகுதியில் தனது மகளின் வீட்டின் அருகிலேயே 90 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். சம்பவத்தன்று, அவரின் மகள் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்று விட்டார்.
 
அப்போது, அந்த மூதாட்டியின் வீட்டிற்கு அந்த 50 வயது மருமகன், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
விசாரணையில் அவர் அப்போது மது போதையில் இருந்தது தெரிய வந்தது. எனவே, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
90 வயது மூதாட்டியை அவரது மருமகன் பாலியல் பலாதகரம் செய்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்